இரசிகை-இரசித்தவை

Tuesday, August 08, 2006

பொன் மாலைப் பொழுது...!

என்னைக் கவர்ந்த வைரமுத்துவின் முதல் திரைப்பட பாடலான "இது ஒரு பொன் மாலைப்பொழுது.." என்ற பாடலில் வரும் சரணங்கள் இரண்டைத்தான் அறிந்திருப்பீர்கள். ஆனால் அப்பாடலுக்காக அவர் எழுதியது மூன்று சரணங்கள். இதோ அந்தப் பாடல் விட்டுப்போன வரிகளுடன்..

படம் : நிழல்கள்

இது ஒரு பொன் மாலைப் பொழுது - இது

ஒருஇது ஒரு பொன் மாலைப் பொழுது

வானமகள் நாணுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்

ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
ராத்திரி வாசலில் கோலமிடும்
வானம் இரவுக்குப் பாலமிடும்
பாடும் பறவைகள் கானமிடும்

பூமரங்கள் சாமரங்கள்
வீசாதோ?

வானம் எனக்கொரு போதிமரம்
நாளும் எனக்கது சேதிதரும்
ஒரு நாள் உலகம் நீதி பெறும்
திருநாள் நிகழும் தேதி வரும்

கேள்விகளால் வேள்விகளை
நான் செய்வேன் ..

(விட்டுப்போனது)

இரவும் பகலும் யோசிக்கிறேன்
எனயே தினமும் பூசிக்கிறேன்
சாலை மனிதரை வாசிக்கிறேன்
தீயின் சிவப்பை நேசிக்கிறேன்

பேதங்களே வேதங்களா
கூடாது

Friday, August 04, 2006

இணைய மாத இதழ் அறிமுகம்

இன்றைய இணையில்லா இணைய தொழில் நுட்ப இயக்கத்திற்கு ஏற்றவகையில் உலகின் மற்றைய மொழிகளுக்கும் சமமாய் சற்றும் குறைவில்லாவகையில் எம் தாய் மொழியாம் தமிழில் பெண்களின் உரிமைக்கான குரலை உரத்து சொல்லும் "தாயக பறைவைகள் " என்னும் மாத இதழாக இந்த இணைய இதழை வெளியிடுகிறார்கள். பெண்களின் பிரச்சனை மட்டுமா?? ஆண்களின் பிரச்சனைகளையும் அம்பலப்படுத்தத்தவும் தயங்க மாட்டார்களாம். அவர்களிற்குமாய் தங்கள் குரல் ஓங்கியே ஒலிக்கும். பலநாட் கனவு சிலநாள் முயற்சி கண்முன்னே தாயகப்பறவைகளாக இணையவானில் பறக்க தாயாரான வண்ணம் இருக்கிறார்கள்..

வாசகரின் தேவையறிந்து, ஒரு செய்தி ஊடகம் என்ற கோட்டுக்குள் மட்டும் இன்றி உலக நடப்புகள், விளையாட்டுகள், கலாசாரம், விஞ்ஞான தொழிநுட்பம், என பல்வேறு பரிமாணங்களை அவ்ர்களது மாத இதழ் தாங்கி வருகிறது. அதுமட்டுமல்லாது தமிழ் தெரியாதோரும் பயன்படுத்தும் வகையில் காலப்போக்கில் பல்வேறு மொழிகளிலும் தாயகப்பறவைகள் பறந்து வர உரிய நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ள வண்ணம் உள்ளன.

இணைய உலகம் ஒரு சமுத்திரம் அதில் சிறு துளியாய் இணைகிறது தாயகப்பறவைகள். எங்கெங்கோ வெவ்வேறு கண்டங்களில் வெவ்வேறு திசைகளில் பயணித்துக்கொண்டிருக்கும் ஒரு பறவைக்கூட்டம் தாயகப்பறவைகள். கனவுகளைய்க் களைந்து கற்பனைகள் கலைத்து நியம் தேடும் அவர்களோடு கூட பயணிக்கவும் அவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்கவும். இளைய முதிய எழுத்தாளப் பெருமக்களை இருகரம் நீட்டி வரவேற்கிறார்கள்.

இணையத்தளம்- www.thayakaparavaikal.com