
இணையக் காதல்..?!
இணையத்தில் இணைந்து
இதயத்துடன் கலந்தவனே..
என் இதயச் சுவரெல்லாம்
உன் பெயரையே எழுதுகிறேன்..!
உனைக் காணாத நேரத்தில்
கவலையில் கரைந்தவள்
உன்னைக் கண்டபோது
கண்மூடி இருந்தேன்..
காரணம் தான் தெரியவில்லை..!
நினைவுகளின் தேடல்களாய்,
நீ எனக்குள் இருப்பதனால்,
உன் நினைவுகள் இன்றும்,
தொடர்கதையாய் தொடர்கிறது.
உன்னோடு தொடர்பொன்றை
ஏற்படுத்த துடிக்கிறது .
என் இதயம் - ஆனாலும்... !
நெஞ்சுக்குள்....ஓர் படபடப்பு
இதயச் சுவரையும்
துளைபோட்டு ஈர்த்திட்ட
உன் அன்பை நேசிக்கிறேன்..
உன்னையும் நேசித்தேன் - ஆனாலும்
கழுத்துவரை வந்த வார்த்தை
கடைசிவரை சொல்லாமலே..
கனவுக்குள் முடங்கியது..!
3 Comments:
At Sunday, August 27, 2006,
Rasikai said…
ஹீ ஹீ தமிழினி அப்படி ஒரு சங்கதியும் இல்லை சும்மா பொழுது போகலை அதுதான் கிறிக்கினம் ;)
At Thursday, September 07, 2006,
U.P.Tharsan said…
நல்யாயிருக்கு
At Wednesday, September 20, 2006,
Rasikai said…
நன்றி தர்சன்
Post a Comment
<< Home