இரசிகை-இரசித்தவை

Thursday, March 16, 2006

வணக்கம் எல்லோருக்கும்!

இந்த இரசிகையின் குடிலுக்கு வருகை தந்த அனைவருக்கும் என்ர முதல் கண் நன்றியைத் தெரிவித்து கொள்ளுறன். வாருங்கோ எல்லோரும் ஒரு ரீ போடுறன் குடிச்சுட்டு உங்கட கருத்தை சொல்லிட்டு போங்கோ.இந்த இரசிகை ஏன் இதை இரசிகை இரசித்தவை என ஆரம்பிச்சு இருக்கிறா என உங்களுக்கு மண்டை வெடிக்குதா? பெருசா ஒன்றும் இல்லை இந்த வெளிநாட்டு வாழ்க்கைல நான் இரசித்த பழைய புதிய நினைவுகளுடன் என்னை பாதிச்ச விடயங்களையும், உங்களுடனும் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்குறன்.

12 Comments:

  • At Thursday, March 16, 2006, Blogger Rasikai said…

    வணக்கம் தொடர்கதை
    உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிகள் பல
    ஆஹா ரீக்கு சீனி போதலயா? சீனி நிறைய போட்டால் சர்க்கரை வியாதி வந்துடும் அதுதான் கணக்கா போட்டன்.,..

     
  • At Thursday, March 16, 2006, Blogger சினேகிதி said…

    ஆஹா ஏன் உங்கட பழைய குடில் மழையில விழுந்து போட்டுதா?? குடில் புத்துணர்ச்சியோட எழும்பி நிக்குது.ரசிகை ரசித்ததை ரசிப்பதை நானும் வாசிக்க ஆவலாயுள்ளேன்.

    எனக்கு ஒரு பால் தேத்ததண்ணி :-)

     
  • At Thursday, March 16, 2006, Blogger Rasikai said…

    ஆஹா வாருங்கோ சிநேகிதி வணக்கம்
    ஓமோம் அது பாருங்கோ புயல் சிக்கி சில்லாவல்லமா போச்சு அதுதான் புதுசா ஒரு குடில் கட்டுவம் என்டு பார்த்தன், உங்களுக்கு இல்லாதா பால் ரீயா போட்டால் போச்சு இருந்து குடிச்சுட்டு போங்கோ ஆற முதல் ;)

     
  • At Friday, March 17, 2006, Blogger நிதர்சன் said…

    வணக்கம் இரசிகை!
    உங்களை குடில்களுக்குள் வரவேற்கின்றேன். எழுதுங்கள்..பட் படிக்க நேரமிருக்குமா தெரியல்ல.. தமிழ்மணத்திலும் இணையுங்கள்..சோழியன் அண்ணா சினேகிதி இருவரும் தினமும் வாசிப்பார்கள் ஹிஹிஹி

     
  • At Wednesday, March 29, 2006, Blogger Rasikai said…

    வணக்கம் நிதர்சன்
    நன்றி உங்கள் வருகைக்கும் வரவேற்புக்கும்.

     
  • At Thursday, March 30, 2006, Blogger இளங்கோ-டிசே said…

    வாருங்கள்! வாழ்த்துக்கள்!

     
  • At Friday, March 31, 2006, Blogger Rasikai said…

    வணக்கம் டி.சே. தமிழன்.
    நன்றி உங்கள் வருகைக்கும் வரவேற்புக்கும்.ம்ம் உங்கள் கட்டுரைகள் கவிதைகளும் நான் வாசிக்கிறனான்.

     
  • At Thursday, June 01, 2006, Blogger சின்னக்குட்டி said…

    வணக்கம ...ரசிகை..... உராய்வு பற்றிய விமர்சனத்தை காலம் தாழ்த்தி விமர்சித்தாலும் நனறாக செய்திருக்கிறீர்கள்......

    நிதர்சன் சொன்னமாதிரி தமிழ் மணத்தில் தேன்கூடு போன்றவற்றிலும் பதிந்து விடுங்கள்.....பதிந்து பின்னூட்ட ஒழுங்குகளையும் செய்து விடுங்கள்

     
  • At Thursday, June 01, 2006, Blogger Rasikai said…

    வணக்கம் சின்னக்குட்டி
    நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

    ம்ம் இணைந்து விடுகிறேன்.

     
  • At Wednesday, September 06, 2006, Anonymous Anonymous said…

    எனக்கு ஒரு பால் தேத்ததண்ணி

    சீனி பார்த்து போடுங்க

     
  • At Wednesday, September 20, 2006, Blogger Rasikai said…

    வணக்கம் காண்டீபன்
    உங்கள் வருகைக்கு நன்றிகள்
    அதுசரி பால்த்தேத்தண்ணி தந்தால் போச்சு
    ஆட்டுப்பாலா மாட்டுப்பாலா கழுதைப்பாலா எண்டு சொல்லுங்கோ??

     
  • At Monday, January 22, 2007, Anonymous Anonymous said…

    வணக்கம்,
    இன்று தான் உங்கள் குடிலுக்கு விஜயம் செய்தேன்.
    நன்றாக இருக்கிறது.
    ஆனால் மனச்சாட்சியைப் பற்றி ஒரு வசனம் போட்டிருக்கிறீர்கள். அதில் எனக்கு உடன்பாடில்லை. மனச்சாட்சியின் படி வேலைசெய்ததால் வீழ்ந்தவர்கள் பலரைக் கண்டிருக்கிறேன். (குடிலில் பிழை பிடிக்க வேண்டும் என்பதற்காகக் தேடிப் பிடித்த தவறு)
    மற்றும்படி குடில் அமைதியாய் அழகாய் இருக்கிறது. தொடருங்கள் உங்கள் பணியை

    அன்புத் தங்கை
    காவியா

     

Post a Comment

<< Home