
மனதில் இன்றும் ஈரமாய்.....!
பூவரசம் இலையில் பீப்பி ஊதி..
லக்ஸ்பிறே பேணியில் மேளம் கொட்டி..
வாழைநாரில் தாலி கட்டி..
மண்சோறில் விருந்துவைத்து...
ஆடிக்களித்த நாட்கள் அச்சச்சோ அழகே அழகு...!
தேனீர் குவளையில் ஒலிபெருக்கி செய்து...
பப்பாசி குழலில் ஒலிவாங்கி கட்டி...
ஊர்முழுக்க கேட்குமென்று நினைத்து...
உரத்து உரத்து பாடினது நினைச்சாலே..
இனிக்குது நெஞ்சை விட்டு போக மறுக்குது...!
மாங்காய் சம்பல் போட்டதும்..
நெல்லிக்காய் பொறுக்கி தின்றதும்..
பொன்வண்டு பிடித்து தீ பெட்டியில் அடைத்து...
குஞ்சு பொரித்திட்டுதா என்றே...
நிமிடத்துக்கு ஒருதரம் பார்த்து பார்த்து...
இருந்த காலம் கொல்லுதே மனசை கொல்லுதே..!
தீ பெட்டியில் தொலைபேசி பேசி மகிழ்ந்து...
தென்னம் மட்டையில் கிரிக்கெட் ஆடி மகிழ்ந்து...
புளியம்விதையில் தாயம் விளையாடியதெல்லாம்...
மனசை விட்டு போக மறுக்குதே..
மறுபடியும் அந்நாளுக்காய் மனசு ஏங்குதே...!
எறிந்த கல்லு திரும்பி வருவதில்லை..
சென்றவயது சென்றதுதான்-இருந்தும்
அந்த மழலைகால நினைவில்...
மனது மயங்கிபோவதை யார் தடுப்பார்...?!
4 Comments:
At Wednesday, August 23, 2006,
Chandravathanaa said…
நன்றாயிருக்கிறது.
பல நினைவுகளை மீட்டுகிறது.
At Sunday, August 27, 2006,
Rasikai said…
நன்றி சந்திரவதனாக்கா. முதலில் உங்கள் வருகைக்கு நன்றி
நான் உங்கள் புளக்கு எனது புளக் ஆரம்பிக்க முன்னரே வாசிக்கிறனான். உங்கள் எழுத்தின் இரசிகை நான். நீங்கள் என்னை பாராட்டும் போது உண்மையிலேயே சந்தோசமாக இருக்கிறது. நன்றி
At Thursday, January 25, 2007,
த.அகிலன் said…
ம் நல்ல அனுபவங்கள் ரசிகை ஒவ்வொன்றையும் ஒவ்வொரு கவிதையாக எழுதலாம்.இவ்வளவுகாலம் தாமதமாக இப்பதிவை பார்த்தமைக்கு மன்னிக்கவும்
At Tuesday, August 14, 2007,
Rasikai said…
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. இதுக்கெல்லாம் மன்னிப்புக் கேக்கத்தேவையில்லல
Post a Comment
<< Home